என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடைக்கால பட்ஜெட்"
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானால் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆனால் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள் என்றால் அடுத்து வரும் புதிய அரசு இவர்கள் தாக்கல் செய்திருக்கும் குழப்பம் வாய்ந்த இந்த பட்ஜெட்டினை ஏன் தொடர்வார்கள்? அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட்.
மிக முக்கியமாக இந்த மத்திய நிதியறிக்கை தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்தும் எவ்வித அக்கறையினையும் காட்டவிரும்பவில்லை என்பது தான் உண்மை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Budget2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் யூனியன் தனக்கன்குளம் அருகில் உள்ள திருவள்ளுவர் நகரில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த கிராமசபை கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் வந்திருக்கிறீர்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் போன்ற பரவசத்தில் நான் வந்துள்ளேன்.
கிராமங்களில் இருந்து தான் அரசியல் பிறந்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 617 கிராம ஊராட்சிகள் உள்ளன. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தார்கள். அதனால் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அவசியம் இல்லாமல் இருந்தது.
தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் நாங்கள் கூட்டம் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் குடிநீர், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி பொய் கூறி ஆட்சிக்கு வந்தார். அதே போல தமிழக முதல்வர் எடப்பாடியும், சசிகலாவை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார். இருவரும் பொதுமக்களை ஏமாற்றுவதில் கில்லாடிகள்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்லது செய்வது போல் பிரதமர் மோடி மீண்டும் ஏமாற்றத் தொடங்கியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியின் போது விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொல்கொத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தவறு என்று கூறினார்.
ஆனால் அவர் பெரிய பணக்காரர்களின் பல்லாயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறும் அவர், கடந்த 6 மாதத்தில் 20 சதவீதம் உரவிலை உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்த தவறி விட்டார்.
ஜி.எஸ்.டி. மூலம் விவசாயிகளிடம் இருந்து மறைமுகமாக வரிகளை வசூலிக்கின்றனர். இந்த சலுகைகள் எல்லாம் திருட்டுத்தனம் ஆகும்.
மேற்கு வங்காளத்தில் இரும்பு பெண்மணியாக மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு பா.ஜ.க.வால் அரசியல் செய்ய முடிய வில்லை. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி உள்ளது. மத்திய மாநில அரசுகளை அகற்ற மக்கள் இங்கு கூடி வந்திருக்கிறார்கள்.
நீங்கள் (பொதுமக்கள்) கொடுத்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இல்லையெனில் விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதா புகழ் பாடுகிறவர்கள் அவரது பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் இதுவரை எந்த நிகழ்ச்சிளையும் நடத்த வில்லை.
தமிழகத்தில் 21 சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன், தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஆனால் மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வருவதையே பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மு.க.ஸ்டாலினிடம் தனக்கன்குளம் கிராம மக்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு மற்றும் 100 நாள் வேலை கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். #mkstalin #parliamentelection #bjp #admk #pmmodi
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றம் கூடியது. நாளை பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) பியூஸ்கோயல் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்று இருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நமது நாடு உறுதியற்ற காலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைத்து பிரச்சனைகளும் சமாளிக்கப்பட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது.
தற்போது நாம் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எனவே 2019-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும்.
மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சி திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட திட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை-எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பிரதமரின் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல ஏழைகள் உரிய மருத்துவ வசதி பெற மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
பிரதமரின் சவுபாக்கியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டு இந்தியாவில் கழிவறை வசதியுடன் சுமார் 40 சதவீதம் வீடுகள் தான் இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 98 சதவீதம் பேர் கழிவறை பெற்றுள்ளனர்.
ஏழைகளுக்கு அதிக பணம் கொடுத்து மருந்துகள் வாங்கும் சக்தி இல்லை என்பதால் இந்தியா முழுவதும் 600 மாவட்டங்களில் குறைந்த விலை மருந்து கடைகள் 700-க்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 4 ஆயிரத்து 900 மருந்து வகைகள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஏழை பெண்கள் நலனுக்காக மானிய விலையில் கியாஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 6 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். இதன் மூலம் ஏழைகள் விறகு அடுப்பு புகை தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.
13 கோடி பேருக்கு மானியம் விலையில் சமையல் கியாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும்.
முத்தலாக் பிரச்சனை காரணமாக முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது முஸ்லிம் பெண்கள் அச்சமின்றி வாழும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த 4½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்குடன் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
ஏழை எளியவர்களுக்காக முத்ரா கடன் பெறும் வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் பலன் பெற்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. முன்பு 3.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். தற்போது 6.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும்.
எல்லையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு விஷயத்தில் இந்த புதிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
இந்திய விமான படையில் விரைவில் அதிநவீன ரபேல் போர் விமானம் சேர்க்கப்படும். இது நமது விமானப் படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும்.
காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தேசிய சுகாதார காப்பீடு திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் 50 கோடி பேருக்கு மேல் பலன் அடைவார்கள்.
சுகாதாரத்துக்காக நாட்டின் நான்கு புறமும் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரையிலும், காஷ்மீரில் குல்காம் நகரிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் முக்கியத்துவம் அளித்தார். அவரது வழியில் தற்போது சாலைகள் இணைப்பு மேம்பாடு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் திறமையை மேம்படுத்த “ஸ்டாண்டு ஆப்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி., 7 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.
நாடு முழுவதும் கேந்திர வித்யா பள்ளிகள் அதிகளவில் திறக்கப்படும். முதல் கட்டமாக 103 கேந்திர வித்யா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்காக புதிய உபகரணங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளின் வருவாய் 1½ மடங்கு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தக்க உதவிகள் செய்வதால் தற்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதால் மேலும் பல ஏழைகள் சம அளவில் முன்னேற்றம் பெறுவார்கள்.
மகளிருக்கு பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி வளர்ந்து உள்ளது.
இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மரியாதையாக நடத்தும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
நாம் அனைவரும் அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தியின் வழியினை பின்பற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உதவிடவே மத்திய அரசு கடுமையாக உழைக்கிறது. இதனை முன்னிட்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழை, எளிய பெண்களின் தரத்தினை மேலும் உயர்த்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 75000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேலும் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் வரலாற்று சிறப்பு பெறூம் வகையில், மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. மேலும் ஜன்தன் திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் 34 கோடியில் புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாடு முழுவதும் 9 கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவிலேயே மின்சாரம் இல்லாத வீடே இல்லை எனும் நிலை உருவாக்கப்படும். இவையனைத்துக்கும் மேலாக பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.
மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.
எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.
இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.
தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal
புதுடெல்லி:
பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
இந்த அரசின் பதவி காலம் முடிந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் இதற்காக இந்தியா திரும்புகிறார்.
தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் பொதுப்பிரிவினருக்கு பொருளாதாரத்தில் (ரூ.8 லட்சம் வரை) பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த அளவு கோலின்படி பார்த்தால் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த அதிகமான வாய்ப்பு உள்ளது.
இதே போல கார்ப்பரேட் வரியும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம். மேலும் பல்வேறு பொருளாதார சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #budget
பாராளுமன்ற மக்களவைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வழக்கம்போல் வரும் மார்ச் மாதத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய அரசு தாக்கல் செய்ய இயலாது.
எனவே, அரசின் செலவினங்களுக்காக சில துறைகளுக்கு நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்வதற்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்